என் தாயே
May 25th, 2008 by capitalzஎன் தலையாய கடமை
உன்னை
நீயாக வைத்திருப்பது
என் மனைவிக்காக எழுதியது.
Love the way she is; Should keep her how she is now, forever.
என் தலையாய கடமை
உன்னை
நீயாக வைத்திருப்பது
என் மனைவிக்காக எழுதியது.
Love the way she is; Should keep her how she is now, forever.
இங்கு தேவதைகளும்
தற்காப்புக்கு வாள்
எடுத்து தான் வர வேண்டும்…
இது வாட்போர் இல்லை…
வாழ் போர்…
வாழ்வோர் எல்லாம்…
களத்தில் …
வீழ்வோர் மட்டும்
அடி தளத்தில்…
காலத்தின் கையில் அடிபட்டு
தலை சிதைந்த
தலை எழுத்து நான்…
என் காலங்கள் கண்ணோடு
கண்ணீறாக கரைந்து கொண்டிருக்கிறது…
ஒரு துளியில் உறைந்து
அமிழ்ந்து…
தொலைந்து போன வாழ்க்கையில்….
இறுதி வரை நான்
தேடி கொண்டிருப்பது
எனையும்…
என் முகத்தையும்…
மெல்லிய மயிலிறகு வருடுகிறது
அதன் வண்ணம் ஒழுகி
என் மனம் நனைகிறது…
தூய புறாவின்
முனகல்
காதில் ஒலித்து கொண்டே
இருக்கிறது…
நீ கிளியா?
பின்பு ஏன்?
உன் ஒவ்வொரு வார்த்தையும்
என் காதில்
அசரீரி போல ஒலித்து
கொண்டே இருக்கிறது!
காதலுக்கு கண்னில்லை…
பேதம் இல்லை….
மொழி இல்லை…
காதல்… கடவுள்…
இதோ வாழ்கிறார்கள் இப்புகைப்படத்தில்
இருவரும்….
காதலிப்போரே!
இது தான் காதல்…!!!
Bad Behavior has blocked 1 access attempts in the last 7 days.